Friday, April 5, 2013

சராசரி மருமகளிடம் இருந்து ஒரு சில அனுபவங்கள் / ஆலோசனைகள்



  • ·         அனைத்து மருமகளும் மாமியார் மாமனாரை தாய் தந்தை போல கவனிக்க / அன்பு செலுத்த வேண்டும். ஆனால் அவர்கள் தங்கள் சொந்த மகளாக உங்களை நடத்த எதிர்பார்க்க கூடாது.

  • ·         வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய் , புதன், வியாழன். வெள்ளி மற்றும் சனி தவிர மற்ற நாட்கள் அம்மா வீட்டிற்கு செல்ல உசித்தமான நாட்கள்

  • ·         எந்த ஒரு கருத்து சொன்னாலும் மறுப்பு ஏதும் சொல்லாமல் அதன் படி நடத்தல் மிகவும் நன்று. ஒரு நாள் ஒரு முறை மறுத்தாலும் அது பல முறை நினைவுப்படுத்தப்படும். ஏன் தான் மறுத்து பேசினோம் என்று பின் ஒரு நாளில் வருந்த்வது வீண் ..

  • ·         சிறிய மனக்கசப்புகள் ஏற்படும் நேரம் முறையே மன்னிப்பு கேட்டல் அவசியம்.

  • ·         உண்மையிலேயே அம்மா அப்பா என்று மனதார நினைத்து அவர்களோடு பழகி வந்தால், அவர்கள் சொல்லும் சிறு சிறு குறைகள் நமக்கு பெரிய வலி ஏற்படுத்தாது..

  • ·         நமக்கு அன்பை பொழியும் கணவன் கிடைக்க காரணமா இருந்த உயிர்கள் இவர்கள் என்று மரியாதை செலுத்தினால், அவர்களது பெரிய மனதில் ஓரமாக ஒரு சின்ன இடம் கிடைக்கும்

  • ·         ஒரு மகனுக்கு திருமணம் ஆனா பின்னர் மனைவிக்கு தான் முன்னுரிமை. இருப்பினும் உங்களுக்காகவே அவர் ஏதாவது வாங்கி வந்திருந்தாலும் பெரியவர்களுக்கு கொடுத்து பிறகு நாம் எடுத்து கொள்வதே நமக்கு அழகு.

  • ·         பெரிய பெரிய முடிவுகள் கணவன் மனைவியாக எடுக்கும் முன்னர் அவர்கள் ஆலோசனை கேட்பது, அவர்கள் வாய் விட்டு கேட்காவிடினும் எதிர்பார்க்கும் குணத்தை நாம் பூர்த்தி செய்வதாகும். 

தொடரும்..

Wednesday, February 10, 2010

வணக்கம்..

நான் தான் சராசரி பெண் பேசுகிறேன். நீங்கள் நேற்று பார்த்த யாரோ ஒருத்தியை போன்ற முக ஜாடை எனக்கு. ஆயிரம் எண்ண ஓட்டங்களும், கற்பனைகளும் ஆசைகளும் பெருக்கெடுத்து ஓடும் பெண் நான். சில தடவை வார்த்தைகளிலும் பல தடவை மெளனங்களிலும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறேன் அவற்றை.

கிட்ட தட்ட 25 வயது நிரம்பிய எனது வாழ்க்கையில் வியப்பாய் இருக்கிறது திருமணம் என்ற ஒரு வார்த்தை. எத்தனையோ கனவுகளோடு ஆரம்பித்த இந்த பயணம் நடைமுறை வாழ்க்கையில் ஒவ்வொன்றாக மாறி கொண்டே வருகிறது.
எனது எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு தளமாக இதை உருவாக்கியுள்ளேன். எதிர்கால கணவனை தேடும் வேட்கைக்காகயில்லை. எனது எண்ணங்களை வெளிப்படுத்துவதன் மூலம் சில மாற்றங்களை முடிந்தால் செய்யலாம் என்ற முயற்சி தான் இது. எனக்கென்று அடையாளம் இல்லாமல் இல்லை. ஆனால் அப்படி செய்வதில் எத்தனை பேர் என் எழுத்தையும் எத்தனை பேர் என்னை பற்றி ஆராய்வார்கள் என்று எனக்கு சரியாக சொல்ல முடியவில்லை.

ஸ்பென்சரில் சைட் அடிக்கும் ரகமில்லை நான். கோயிலில் குத்துவிளக்காய் திரியும் சாத்வீகமும் இல்லை. இரண்டிற்கும் நடுவில் இருக்கும் ஒரு சராசரி பெண்.